/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடன் வழங்கியவரை மிரட்டிய கணவன், மனைவி மீது வழக்கு
/
கடன் வழங்கியவரை மிரட்டிய கணவன், மனைவி மீது வழக்கு
ADDED : ஆக 22, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சின்னசவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வலசம்மா 45. இவரிடம் போடி வினோபாஜி காலனியை சேர்ந்த வேளாங்கண்ணி, இவரது மனைவி மாலதி இருவரும் ஓராண்டுக்கு முன்பு ரூ.4 லட்சம் கடனாக வாங்கி உள்ளனர்.
வலசம்மா, இவரது கணவர் ஜெகதீசன் இருவரும் சேர்ந்து கொடுத்த பணத்தை வேளாங்கண்ணியிடம் திரும்ப கேட்டு உள்ளனர் வேளாங்கண்ணி, மாலதி இருவரும் பணம் தர முடியாது என்றும், பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாக கூறி, தன் வீட்டு நாயை ஏவி விட்டுள்ளனர்.
நாய் கடிக்க வந்ததால் ஜெகதீசன் கீழே விழுந்துள்ளார். போலீசார் வேளாங்கண்ணி, மாலதி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.