/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழக்கறிஞரை தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு
/
வழக்கறிஞரை தாக்கிய கணவன், மனைவி மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2025 02:31 AM
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை செயின்ட் சேவியர் தெருவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாலு 37. இவருக்கு சங்கர், அழகுராஜா, பாலகிருஷ்ணன் என மூன்று தம்பிகள் உள்ளனர். இதில் அழகுராஜா, சங்கருக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டது. இதனை பாலு இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இருவரும் பாலுவை அவதூறாக பேசி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சங்கர் அவரது மனைவி சிந்தனைச்செல்வி இருவரும், வீட்டிலிருந்த பாலுவை அவதூறாக பேசி, கல்லால் அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தடுக்க வந்த பாலுவின் மனைவிக்கும் அடி விழுந்தது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாலு அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் சங்கர், சிந்தனைச் செல்வி மீது வழக்கு பதிவு செய்தனர்.-