ADDED : ஜூலை 05, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; போடி முதல்வர் காலனியில் வசிப்பவர் சரண்யா 32. மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் முனீஸ்வரன் 35.
இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் சரண்யா கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் முனீஸ்வரன் குடித்து விட்டு மனைவி சரண்யா வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையால் பேசி உள்ளார்.
இதனை மாமியார் கண்டித்துள்ளார். ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் அருகே இருந்த சேரை தூக்கி மாமியாரை அடித்து காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சரண்யா புகாரில் போடி டவுன் போலீசார் முனீஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.