ADDED : ஜன 13, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தர்மாபுரி வடக்குத் தெரு காளிமுத்து 35. இவரது மனைவி இந்திராணி 30. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. மது குடித்து வந்து காளிமுத்து தொந்தரவு செய்து வந்தார். குழந்தைகளுடன் தனியாக வசித்தார். இந்திராணி வசித்த வீட்டிற்கு வந்த காளிமுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி இந்திராணியை வெட்டிவிட்டு தப்பினார். அருகில் இருந்தவர்கள் இந்திராணியை மீட்டு, வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களது 16 வயது மகள் புகாரில் வீரபாண்டி போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிந்தனர்.