/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த காரைக்குடி தம்பதி மீது வழக்கு
/
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த காரைக்குடி தம்பதி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த காரைக்குடி தம்பதி மீது வழக்கு
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்த காரைக்குடி தம்பதி மீது வழக்கு
ADDED : டிச 25, 2024 02:48 AM
தேனி:அரசு வேலை வாங்கித் தருவதாக தேனி, பெரியகுளத்தை சேர்ந்த 11 பேரிடம் ரூ.30 லட்சம் பெற்று போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சந்திரமுரளி 52, அவரது மனைவி புவனேஸ்வரி 48, மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
பெரியகுளம் தாமரைக்குளத்தை சேர்ந்த பாஸ்கரன் 60, இவரது மகன் கணேஷ்குமார். பொறியியல் பட்டதாரி. பாஸ்கரனுக்கு அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், அவரது நண்பர் மணிகண்டனின் பழக்கம் ஏற்பட்டது.
பாஸ்கரனிடம் மணிகண்டன், எனது நண்பர் ரவிச்சந்திரனுக்குசிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சந்திரமுரளி, அவரது மனைவி புவனேஸ்வரியை நன்கு தெரியும். அவர்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகளிடம் பழக்கம் உள்ளதால்,பணம் கொடுத்து, அரசுப் பணி வாங்கி கொடுத்து வருகின்றனர் என கூறினார்.
இதனை நம்பிய பாஸ்கரன் சந்திரமுரளியை அலைபேசியில்தொடர்பு கொண்டார். ரூ.17 லட்சம் கொடுத்தால் கணேஷ்குமாருக்கு சென்னைமாநகராட்சியில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பிய பாஸ்கரன், ரூ.7 லட்சத்தை ரொக்கமாகவும், சந்திரமுரளி, அவரது மனைவி புவனேஸ்வரி வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கினார். பின் மணிகண்டனின் மனைவிக்கு அலுவலக உதவியாளர் வேலைக்கு ரூ.3 லட்சம்என,ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும் 9 பேரிடம் அரசு பணிகள் வாங்கித் தருவதாக ரூ.15 லடசம் என மொத்தம் ரூ.30 லட்சம் பெற்றனர். பணத்தை பெற்றுக்கொண்ட சந்திரமுரளி பணி ஆணையையும் வழங்கினார். பணியில் சேர சென்றபோது அது போலி என தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரன் தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.
எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர சந்திரமுரளி,புவனேஸ்வரி மீது மோசடி வழக்குப் பதிந்துள்ளனர்.