/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துாய்மை பணியாளரை தாக்கியவர் மீது வழக்கு
/
துாய்மை பணியாளரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : செப் 27, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் வைரவன் 22. நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வடகரை பள்ளிவாசல் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சல்மான்பாரிஸ்க்கும், வைரவனுக்கும் குப்பை கொட்டுவதில் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சல்மான் பாரிஸ், வைரவனை அடித்துள்ளார். இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பழையபஸ்ஸ்டாண்ட் பகுதியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.
வடகரை போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் மறியலை கைவிட்டனர். போலீசார் சல்மான்பாரிஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.-