/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு
/
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 30, 2025 12:26 AM
தேவதானப்பட்டி, ஜூலை 30--
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெரு பால்பாண்டி மனைவி வாசுகி 38. வீட்டில் இருந்துள்ளார். ஜி.கல்லுப்பட்டி ஆர்.டி.யூ., காலனியைச் சேர்ந்தவர் ரிசாத்ராஜ் 25.
வாசுகியிடம் உனது கணவரை பால்பாண்டியை வெளியே வரச்சொல்லு என பட்டாகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் 25. இவருக்கும் ரிசாத்ராஜிற்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கார்த்திக்கை கத்தியை காட்டி ரிசாத்ராஜ் மிரட்டியுள்ளார். நிசாத்ராஜ் மீது தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொள்ளை, திருட்டு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வாசுகி, கார்த்திக் இருவரது புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை, கத்தியோடு சுற்றி திரியும் நிசாத்ராஜை தேடி வருகிறார்.