/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விசா பெற்றுத்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

ADDED : நவ 22, 2024 02:22 AM
தேனி:விசா பெற்றுத்தருவதாக இருவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த திருச்செந்துாரில் இயங்கி வந்த ஆதிரா தனியார் நிறுவன உரிமையாளர் ரஞ்சித் மீது உத்தமபாளையம் போலீசார் மோசடி வழக்குப்பதிந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் ஆதிரா என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் செயல்படுகிறது. உரிமையாளர் ரஞ்சித். இந்நிறுவன விளம்பரத்தை பார்த்து உத்தமபாளையம் பி.டி.ஆர்., காலனி சபீர்முகமது விசா பெற்றுத்தர கோரினார். பல தவணைகளில் ரஞ்சித் வங்கிக் கணக்கிற்கு சபீர் முகமது ரூ.5 லட்சம் அனுப்பினார். ரஞ்சித் விசா பெற்றுத் தரவில்லை.
பின் திருச்செந்துாரில் உள்ள நிறுவனத்தை மூடிய ரஞ்சித் 2022ல் வெளிநாடுசென்றார். சபீர்முகமது தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் வெளிநாட்டில் உள்ள ரஞ்சித் மீது உத்தமபாளையம் போலீசார் மோசடி வழக்குப் பதிந்துள்ளனர்.