ADDED : நவ 26, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி திருமலாபுரம் காமராஜர் வித்யாலயா தெருவை சேர்ந்தவர் ஆனந்த மீனாட்சி 26. இவர் தனது அலைபேசி சிம்கார்டு நெட்வொர்க் மாற்றம் செய்வதற்காக, சிம்கார்டு விற்பனை செய்யும் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு உள்ளார். இதனை பயன் படுத்தி தவறான நோக்கில் ஆனந்த மீனாட்சி அலைபேசிக்கு ரஞ்சித் குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனந்த மீனாட்சி புகாரில் போடி டவுன் போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

