ADDED : நவ 26, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 44, மைக் செட் அமைக்கும் தொழிலில் கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர். கன்னியப்பபிள்ளைபட்டியில் மைக் செட் போடும் வேலையை முடித்துவிட்டு தனது டூவீலரில் வீட்டிற்கு சென்றார். கன்னியப்பபிள்ளைபட்டி கருப்பசாமி கோயில் அருகே எதிரே வந்த ஆட்டோ, டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியதில் முத்துப்பாண்டி பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். முத்துப்பாண்டி மனைவி பாரதி புகாரில் ராஜதானி போலீசார் ஆட்டோ டிரைவர் சத்தியசீலயனிடம் விசாரிக்கின்றனர்.

