ADDED : நவ 26, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கவரிங் வியாபாரி சுப்பிரமணி 53. இவரது மனைவி தெய்வமணி 50. இருவரும் தேவாரம் செல்வதற்காக ஆண்டிபட்டி கரிசல்பட்டியை சேர்ந்த மனோஜ் குமாரின் காரில் சென்றுள்ளனர்.
டயர் வெடித்ததில் கார் மரத்தில் மோதியது. இதில் சுப்பிரமணி, தெய்வமணி பலத்த காயம் அடைந்தனர். இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போடி தாலுகா போலீசார் டிரைவர் மனோஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

