/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாழை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு
/
வாழை மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : மதுரை சண்முகம் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 70.
இவருக்கு தங்கை உள்ளார். அழகர்நாயக்கன்பட்டியில் பூர்வீக சொத்து பிரிக்காமல் உள்ளது. நாகராஜ் நிலத்தை அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த கரியன் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் வாழை தோட்டத்தில் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜீவா. கனிமொழி ஆகியோர் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 750 வாழை மரங்களை வெட்டியுள்ளனர். நாகராஜ் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் ஜீவா, கனிமொழி மீது வழக்கு பதிவு செய்தனர்.