/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சட்டவிரோத பார் நடத்திய மூவர் மீது வழக்கு
/
சட்டவிரோத பார் நடத்திய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 31, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி பூதிப்புரம் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு ஜூலை 27 ல் தமிழ்புலிகள் கட்சியின் தேனி நகர இணைச் செயலாளர் கணேசன் 35, இறந்த நிலையில் உள்ளதாக பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஆசிர்வாதத்திற்கு அலைபேசியில் தகவல் கிடைத்தது.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் டாஸ்மாக் கடை திறக்கப்படாத நிலையில் பார் திறக்கப்பட்டு சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
இதனால்பார் உரிமையாளர் பழனிசெட்டிபட்டி டி.பி.என்., ரோடு கோடீஸ்வரன், சரவணன், காளிதாஸ், ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

