/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
20 பேரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி ரூ.14.72 லட்சம் மோசடி நிதி நிறுவன மேலாளர் உட்பட மூவர் மீது வழக்கு

ADDED : அக் 26, 2025 01:37 AM
தேனி:தேனியில் 20 பேரின் அடையாள ஆவணங்களை அனுமதியின்றி பயன்படுத்தி ரூ.14.72 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மோலாளர் உப்பார்பட்டி பொன்நகர் வீரமுத்து, கள பணியாளர் போடி சந்தனமாரியம்மன் கோயில் தெரு பாண்டிமீனா, குழுத்தலைவி சித்ரா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடியில் தனியார் நிதி நிறுவனத்தின் இரு கிளைகள் உள்ளன. இதில் ஒரு கிளையில் மேலாளராக உப்பார்பட்டியை சேர்ந்த வீரமுத்து, அதே கிளையில் களப்பணியாளரான பாண்டிமீனாவும் இருந்தனர்.
போடி பகுதியில் மகளிர் குழுகள் தலைவியாக சித்ரா செயல்பட்டார். இரு கிளைகளில் நடந்த ஆய்வில் பொதுமக்கள் 20 பேரின் ஆவணங்கள், புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி வழங்கி ஒரு கிளையில் ரூ. 13.07 லட்சம், மற்றொரு கிளையில் ரூ. 1.65 லட்சம் என மொத்தம் ரூ.14.72 லட்சம் மோசடியாக கடன் பெற்றதை மண்டல மேலாளர் முத்தீஸ்வரன் கண்டறிந்தார். இந்த மோசடியில் வீரமுத்து, பாண்டிமீனா, சித்ரா ஆகியோர் இணைந்து செயல்பட்டதாக எஸ்.பி.,சினேஹா பிரியாவிடம் புகார் அளித்தார். மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி வழக்கு பதிவு செய்துள்ளார்.