/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி கிடைக்குமா?
/
தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி கிடைக்குமா?
தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி கிடைக்குமா?
தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதி கிடைக்குமா?
ADDED : அக் 25, 2025 08:05 PM
தேனி: கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, தேனி மாவட்டம் வழியாகவும் பக்தர்கள் செல்கின்றனர். தேனியில் இருந்து, 171 கி.மீ.,ல் உள்ள பம்பைக்கு தமிழக அரசு நேரடி பஸ் இயக்குவதில்லை.
இதனால், பக்தர்கள் குமுளி சென்று, அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்களில் பயணிக்கின்றனர்.
சென்னை, திருச்சி பகுதிகளில் இருந்து பம்பைக்கு தேனி வழியாக, விரைவு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்படுகிறது. புறப்படும் இடங்களிலேயே அந்த பஸ்களில் பயணியர் நிரம்பி விடுவதால், தேனி பஸ் ஸ்டாண்டிற்குள் இந்த பஸ்கள் வருவதில்லை.
தேனிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சென்னையில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வரும் அய்யப்ப பக்தர்கள் பயனடையும் வகையில், கடந்தாண்டு கேரள அரசு, தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பம்பைக்கு பஸ் இயக்கியது.
ஆ னால், தமிழக போக்கு வரத்து கழக அதிகாரிகள் நேரடி பஸ்கள் இயக்க ஆர்வம் காட்டுவதில்லை.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் நேரடி பஸ் இயக்க அனுமதி இல்லை. போக்குவரத்து ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி தெரிவிப்போம். விரைவு போக்குவரத்து கழகத்தினர் தான் பஸ்கள் இயக்க வேண்டும்' என்றனர்.
விரைவு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விதிப்படி, 300 கி.மீ., துாரத்திற்கு மேல் இருந்தால் மட்டும் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும்' என்றார்.
தமிழக அரசு, அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, விதிகளை தளர்த்தி தேனியில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் இயக்க நடவடிக்கை வேண்டும் என, பக்தர்கள் எதிர் பார்க்கின்றனர்.

