ADDED : டிச 08, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி வடக்கு தெரு கலைச்செல்வம் 23. இவர் பாரில் மது குடித்து கொண்டிருந்தார். இதே ஊர் தெற்கு தெரு தங்கப்பாண்டி 26. அவருடன் வந்த மூன்று பேர் கலைச்செல்வத்திடம் பணம் கேட்டுள்ளனர். கலைச்செல்வம் தன்னிடம் இருந்த ரூ.5 கொடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில்
டீக்கடைக்கு டூவீலரில் சென்ற கலைச்செல்வத்தை, தங்கப்பாண்டி மறித்து நாங்களே நடந்து செல்கிறோம் நீ என்ன டூவீலரில் செல்கிறாய் என கல்லால் கலைச்செல்வத்தை அடித்தும், மற்றவர்கள் கையால் அடித்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கலைச்செல்வம் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் தங்கப்பாண்டி உட்பட மூன்று பேரை தேடுகின்றனர்.-