/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேலாளரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு
/
மேலாளரை தாக்கிய மூன்று பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 19, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி,:
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி கோம்பை தெருவைச் சேர்ந்தவர் சக்தி 27. தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.
சில்வார்பட்டியிலிருந்து, வத்தலக்குண்டு ரோடு ஓட்டலுக்கு இரவில் சென்று கொண்டிருந்தார்.
டி.வாடிப்பட்டி பிரிவு அருகே அடையாளம் தெரியாத மூன்று பேர் மது போதையில், சக்தி டூவீலரை மறித்து அவரை தாக்கினர்.
சக்தி சத்தம் போட்டவுடன் அருகிலிருந்தவர்கள் வருவதை பார்த்த மூன்று பேரும் ஒரே டூவீலரில் தப்பினர்.
தேவதானப்பட்டி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.