/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவருக்கு வெட்டு: இருவர் மீது வழக்கு
/
மாணவருக்கு வெட்டு: இருவர் மீது வழக்கு
ADDED : ஏப் 25, 2025 07:01 AM
பெரியகுளம்: பெரியகுளம் சருத்துப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் 21. ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் இளங்கலை (பி.எஸ்.சி.,) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது நண்பர்கள் கேசவன் 21. சந்திரன் 20. ஜெகன் 21 ஆகிய 4 பேர், அதே தெருவில் இரவில் கேரம் விளையாடிக்கொண்டிருந்தனர். டூவீலரில் வந்த இருவர் இந்தப்பகுதியில் விளையாடக் கூடாது என கூறிக்கொண்டு, அரவிந்த் கையில் இருந்த அலைபேசியை பறிக்க முயற்சித்தனர். அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் தடுத்தனர். இதில் ஒருவர் கத்தியால் அரவிந்த் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அரவிந்த் சிகிச்சை பெற்று வருகின்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

