/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
/
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு
ADDED : மார் 16, 2025 02:17 AM
பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் ராணுவ வீரர் ராமராஜ் மகன் பொறியியல் பட்டதாரியான குரு கிருஷ்ணகுமார் 23, என்பவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணை வழங்கிய தலைமை செயலக பணியாளர் மணிகண்டன், அவரது நண்பர் பாண்டியன் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியகுளம் கீழவடகரை முகைதீன் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ்க்கும், உத்தமபாளையம் 2 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் 38, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 'தனக்கு அரசியல்வாதிகள் தெரியும். அரசு வேலை வாங்கி தருவதாக' பாண்டியன் கூறினார். அதன்பின் பெரியகுளம் வடகரையில் வசிக்கும் சென்னையில் அரசு தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் மணிகண்டனை 35, அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாண்டியன், மணிகண்டன் இணைந்து ராமராஜ் மகனுக்கு நெடுஞ்சாலைதுறையில் வேலை வாங்கி தருவதாக 2021 அக்., 20 முதல் 2022 பிப்., வரை அவரிடம் இருந்து பல தவணைகளாக ரூ.8 லட்சம் பெற்றனர். பின் போலியான பணிநியமன ஆணையை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். ராமராஜ் பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். வடகரை போலீசார் இருவர் மீதும் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.