/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழக்கறிஞரை தாக்கிய இருவர் மீது வழக்கு
/
வழக்கறிஞரை தாக்கிய இருவர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை வடக்கு பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் மார்சலின் நெல்சன் 33. இவரை தென்கரையைச் சேர்ந்த தமீம், இவரது நண்பர் ஒருவர் சந்தித்தனர்.
ஓராண்டுக்கு முன்பு வழக்கு விஷயமாக சந்திக்க வந்தார். வழக்கை எடுக்கவில்லை.
வேறொரு வழக்கறிஞர் வழக்கை நடத்தியதால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது என தெரிவித்து வழக்கறிஞரை அவதூறாக பேசி, இரும்பு ராடால் தாக்கினர். தடுக்க வந்த வழக்கறிஞர் மாமா எபினேசனை அடித்ததில் அவருக்கு இரு பற்கள் உடைந்தது.
மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். மார்சலின் நெல்சன் புகாரில் தென்கரை போலீசார் தமீம் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.-