/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தகராறில் தாக்கிய இரு பெண்கள் மீது வழக்கு
/
தகராறில் தாக்கிய இரு பெண்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 12:28 AM
ஆண்டிபட்டி; கண்டமனூர் தெற்கு தெருவைச்சேர்ந்தவர் பாண்டியன் 48, தனது வீட்டில் நகை காணாமல் போனது தொடர்பாக வீட்டிற்கு வெளியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது அண்ணன் மனைவி ஈஸ்வரி,' நான் தானே பக்கத்தில் குடியிருக்கிறேன் என்னைத்தான் சொல்கிறாயா,' என்று கேட்டு கொண்டிருக்கும் போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு வந்த ஈஸ்வரியின் மகள் முருகேஸ்வரி அரிவாள் பின்புறமாக திருப்பி தலையில் தாக்கியதில் பாண்டியன் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்ப்டடார்.
பாண்டியன் புகாரில் கண்டமனூர் போலீசார் ஈஸ்வரி, முருகேஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்