ADDED : ஆக 19, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி; பெரியகுளம் ஒன்றியம், எருமலைநாயக்கன்பட்டி மேட்டுக்காலனியைச் சேர்ந்தவர் விஜி 36. அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது மனைவி அனிதா 31. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கணவர், மனைவிக்கு கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜியின் உறவினர் பரமசிவம் இறந்துள்ளார்.
அப்போது விஜியின் இளைய மகன் அவரிடம் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனிதாவின் உறவினர் பாலமுருகன் கம்பியால் அடித்துள்ளார்.
விஜியின் மாமியார் மீனாட்சி, மனைவி அனிதா, மைத்துனர் சிரஞ்சீவி, உறவினர் ஆனந்த் ஆகியோர் கட்டையால் விஜியை அடித்துள்ளனர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விஜி அனுமதிக்கப்பட்டார். விஜி புகாரில், ஜெயமங்கலம் போலீசார் மீனாட்சி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.