/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீடு தீப்பற்றியதில் பணம், நகை சேதம்: அதிர்ச்சியில் பெண் பலி
/
வீடு தீப்பற்றியதில் பணம், நகை சேதம்: அதிர்ச்சியில் பெண் பலி
வீடு தீப்பற்றியதில் பணம், நகை சேதம்: அதிர்ச்சியில் பெண் பலி
வீடு தீப்பற்றியதில் பணம், நகை சேதம்: அதிர்ச்சியில் பெண் பலி
ADDED : நவ 09, 2024 11:20 PM
சின்னமனூர்:தேனி மாவட்டம் மேகமலையில் வீடு தீப்பற்றியதில் ரூ. ஒரு லட்சம்,5 பவுன் தங்க நகைகள் எரிந்து சேதமாயின. இந்த அதிர்ச்சியில் பெண் இறந்தார்.
மேகமலையை சேர்ந்த மாரிமுத்து 60, தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்கிறார். மாரிமுத்து நவ., 8 காலை காஸ் அடுப்பை பற்ற வைத்து காபி போட பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு வெளியில் சென்றார். அப்போது காஸ் சிலிண்டார் வெடித்து வீடு தீப்பற்றியது.
வீட்டில் இருந்த ரூ.ஒரு லட்சம், 5 பவுன் தங்க நகைகள், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் எரிந்து சேதமாயின. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இத்தகவல் அறிந்து திருப்பூரில் இருந்து மாரிமுத்து மகன் கோபிநாத் 32, அவரது மனைவி தேன்மொழி 33, மேகமலைக்கு வந்தனர். கணவர் வீடு எரிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியில் தேன்மொழி மயக்கமுற்றார்.
அவரை அங்குள்ள தேயிலை எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தேன்மொழிக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது.