/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூத்துக்குலுங்கும் முந்திரி செடிகள்
/
பூத்துக்குலுங்கும் முந்திரி செடிகள்
ADDED : பிப் 16, 2024 06:12 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் முந்திரி செடிகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இன்னும் சில வாரங்களில் பழங்களிலிருந்து முந்திரிக்கொட்டை பிரித்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி பகுதியில் ஆசாரிபட்டி, ரோசனப்பட்டி, நல்லமுடிபட்டி, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், கண்டமனூர் உட்பட பல கிராமங்களில் கொட்டை முந்திரி சாகுபடி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் தொடரும் வறட்சியால் விவசாயிகள் முந்திரி விவசாயத்தை தொடர்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வறட்சியால் விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள் முந்திரி சாகுபடியை தேர்வு செய்தனர். ஒருமுறை நடவு செய்யப்பட்ட செடிகள் பல ஆண்டுகள் வரை பலன் தருகிறது.
அவ்வப்போது மருந்து தெளிக்க வேண்டும். சில வாரங்களுக்கு முன் பெய்த மழை முந்திரி செடிகளுக்கு ஏற்றதாக அமைந்தது.
தற்போது செடிகளில் பூக்கள் அதிகம் எடுத்துள்ளது. இன்னும் சில வாரங்களில் காய்கள் முதிர்ந்து பழுத்து விடும். பின்னர் முந்திரி பிரித்து எடுக்கலாம் என்றனர்.