ADDED : நவ 14, 2024 07:04 AM

தேனி பழனிசெட்டிபட்டிபட்டி மெட்றோப் மருத்துவமனை நிறுவனரும், நோய் குறியியல் சிறப்பு டாக்டர் பி.பிரவீனா மீனாட்சி, எம்.பி.பி.எஸ்., எம்.டி., சர்க்கரை நோய் வருவதற்கு காரணம் குறித்து விவரிக்கிறார்.
கணையம் போதுமான இன்சுலினை சுரக்காத போதும் (Insulin Deficiency).
இன்சுலின் சுரந்தும் அதை சரியாக உபயோகிக்க முடியாத நிலை (Insulin Resistence) தற்போதய உணவு பழக்க வழக்கங்கள், சோர்வான வாழ்க்கை முறை, அதிக எடை இவை மூன்றும் 2ம் வகை சர்க்கரை நோய் வர காரணமாகும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வழி: ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி , உடல் எடையைக் குறைத்தல்சர்க்கரை நோய் மருந்து, மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்வது. முன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவு HbA1c மற்றும் கொழுப்பின் அளவு, சிறுநீரகம், கல்லீரல் பரிசோதனை செய்வது நலம் என தெரிவித்தார்.

