/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டியில் சென்டர் மீடியன் தடுப்புகள் நிரந்தரமாக தேவை
/
ஆண்டிபட்டியில் சென்டர் மீடியன் தடுப்புகள் நிரந்தரமாக தேவை
ஆண்டிபட்டியில் சென்டர் மீடியன் தடுப்புகள் நிரந்தரமாக தேவை
ஆண்டிபட்டியில் சென்டர் மீடியன் தடுப்புகள் நிரந்தரமாக தேவை
ADDED : ஜூன் 18, 2025 04:40 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ரோடு விரிவாக்கத்திற்காக ஆண்டிபட்டியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறை ரோட்டின் ஓரங்களில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தி ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து வைகை ரோடு சந்திப்பு வரை விரிவாக்கம் செய்தது.
விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் தற்போது கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். துணை முதல்வர் உதயநிதி இரு நாட்களுக்கு முன் ஆண்டிபட்டி வழியாக தேனி சென்றார். ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனை முதல் தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு வரை தற்காலிக டிவைடர் (தடுப்புகள்) அமைத்து ஒரு வழி பாதைக்கப்பட்டது. இதனால் கடந்த இரு நாட்களாக இப்பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டின் குறுக்காக வாகனங்கள் செல்லாமல் அனைவரும் பாதுகாப்பாக சென்று வருகின்றனர். தற்காலிக தடுப்புகளை இப்பகுதியில் நிரந்தரமாக்க போலீசார் ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.