/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடலுார்- - கம்பம் இடையே சென்டர் மீடியன் அவசியம்
/
கூடலுார்- - கம்பம் இடையே சென்டர் மீடியன் அவசியம்
ADDED : பிப் 09, 2024 07:10 AM
கூடலுார்: கூடலுார்- கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகளை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் கம்பம் இடையே தேசிய நெடுஞ்சாலை 9 கி.மீ., தூரம் கொண்டதாகும். இங்குள்ள துர்க்கை அம்மன் கோயில், அப்பாச்சி பண்ணை, ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி ஆகியவற்றிற்கு அருகில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த மூன்று மாதத்தில் 20க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நடந்துள்ளன. அதில் பல உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது. துவக்கத்திலிருந்து கம்பம் புறவழிச்சாலை துவக்கம் வரை சென்டர் மீடியன் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் முன் வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

