/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் மீண்டும் சென்டர் மீடியன் அமைப்பு டிராபிக் போலீசார் ஏற்பாடு

ADDED : அக் 06, 2024 03:40 AM

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் பகுதியில் நன்கொடை மூலம் டிராபிக் போலீசார் இரும்பு தடுப்பு சென்டர் மீடியன் அமைத்துள்ளனர்.
தேனி அரண்மனைப்புதுார் விலக்கில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை ரோட்டில் வேளாண் பொறியியல்துறை அலுவலகம் முதல் அரசு ஐ.டி.ஐ., வரை போக்குவரத்து தடை செய்து வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்பட்டன. ஆக.10 முதல் மாவட்ட சாலை பாதுகாப்பு குழு முடிவின் படியும், கலெக்டர் உத்தரவில் போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதில் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே அமைக்கப்பட்ட கான்கிரீட் சென்டர் மீடியன் உடைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு பொது மக்கள், வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின் கலெக்டர் ஷஜீவனா உத்தரவில் மீண்டும் மதுரை ரோட்டில் போக்குவரத்து திறந்துவிடப்பட்டுள்ளது.
பழைய பஸ் ஸ்டாண்டில் சென்டர் மீடியன் தடுப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்டனர். டிராபிக் இன்ஸ்பெக்டர் சஜூக்குமார், தேனி போலீசார் மீண்டும் நெடுஞ்சாலைத்துறையில் சென்டர் மீடியன் அமைக்கக் கோரினர். சென்டர் மீடியன் இடிக்கப்பட்ட விபரம் தெரிவிக்காததால், புதிய சென்டர் மீடியனுக்கு நிதி ஒதுக்க இயலாது என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். வேறு வழியின்றி நன்கொடை மூலம் நேரு சிலை, கம்பம் ரோடு, மதுரை ரோடு பகுதியில் இரும்பு தடுப்பு அமைத்துள்ளனர்.