/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 18ல் மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வு
/
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 18ல் மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 18ல் மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 18ல் மத்திய கண்காணிப்புக்குழு ஆய்வு
ADDED : மார் 08, 2024 12:08 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு மார்ச் 18ல் ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையில் கண்காணிப்புக் குழு உள்ளது.
இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இக்குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்திரமோகன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனதுறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் வேணு, நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் இடம் பெற்றுள்ளனர். இக்குழு 2023 மார்ச் 27ல் அணைப் பகுதியில் ஆய்வு நடத்தியது.
இந்நிலையில் மார்ச் 18ல் இக்குழு மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை ஆய்வு நடத்தி நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
பேபி அணை பலப்படுத்துவது, புதிய படகிற்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக தரப்பு அதிகாரிகள் இக்குழுவில் முன் வைக்க உள்ளனர்.

