/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதைப் பொருள் விற்பனையை தடுப்பதில் அதிகாரிகளுக்கு சவால்! மொத்த விற்பனையாளர்களை கைது செய்வதே தீர்வு

ADDED : ஜூலை 07, 2024 11:58 PM
தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் இந்த விற்பனை அதிகரித்துள்ளது. 'கூல் லிப்' எனப்படும் போதைப் பொருளை மாணவர்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். உணவு பாதுகாப்பு துறையினர், போலீசார் போட்டி போட்டு குட்கா பறிமுதல் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு பின் இந்த ரெய்டு வேகப் படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து குட்கா விற்கும் கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆனால் குட்கா விற்பனை எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து நடந்து வருகிறது. நகரங்கள், கிராமங்களில் உள்ள பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்வது யார்? ஒவ்வொரு ஊரிலும் உள்ள உளவு, தனிப் பிரிவு போலீசார் என்ன செய்கின்றனர் பெட்டிக் கடைகளுக்கு எங்கிருந்து வருகிறது ஒவ்வொரு ஊரிலும் உள்ள மொத்த வியாபாரி யார் என அவர்களை கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தில் கம்பம், சின்னமனுார், போடி, பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி போன்ற நகரங்களை மட்டும் கண்காணித்தாலே குட்கா விற்பனையை கட்டுப்படுத்த முடியும். சிறிய பெட்டிக் கடைக்காரர்களை மட்டும் குறி வைக்கிறார்களே தவிர மொத்த வியாபாரி யார்? ஆணி வேராக காலுான்றி உள்ள வியாபாரிகள் எங்குள்ளனர் என்பதை பற்றி கவலைப்படுவதும் இல்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
வியாபாரிகளை கைது செய்யாத வரை புகையிலை, குட்கா விற்பனையை தேனி மாவட்டத்தில் தடுப்பது சிரமமான பணியாகிவிடும். இதனால் விரைவில் புகையிலை, குட்கா விற்கும் வியாபாரிகளை போலீசார் கைது செய்ய எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.