/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் அலுவலர்களின் பணித்தகுதி மாற்றம்
/
தேர்தல் அலுவலர்களின் பணித்தகுதி மாற்றம்
ADDED : ஜூலை 05, 2025 02:39 AM
தேனி:'தேர்தல் பணியில் 13 வகை ஊழியர்களை மாற்றி 'பி' பிரிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.'' என, கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
ஒரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் என்பவர் அந்த ஓட்டுச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விபரங்களின் உண்மை தன்மை அறிய உதவுதல், பட்டியலை சரிபார்ப்பது, வாக்காளர் புகார்களை நிவர்த்தி செய்யும் பணிகளில் ஈடுபடுவர். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக 13 வகை அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதில் தபால்காரர், சத்துணவு ஊழியர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நகராட்சி வரி வசூலிப்பவர், சுகாதார ஊழியர்கள், மின் கணக்கீட்டாளர்கள், ஊராட்சி ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியாற்றினர். தற்போது தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது.
தேர்தல் அலுவலர்களான கலெக்டர்களுக்கு ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கை: இந்த 13 வகை ஊழியர்களுக்கு பதில் அரசின் இளநிலை உதவியாளர், அரசு ஆசிரியர்கள், அரசு அலுவலக உதவியாளர்கள் என பி பிரிவு அலுவலர்களை நியமிக்க வேண்டும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள், மத்திய அரசுப் பணியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கும் நிலை ஏற்பட்டால் மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.