/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் துவங்கிய சாரல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரம்
/
சுருளி அருவியில் துவங்கிய சாரல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரம்
சுருளி அருவியில் துவங்கிய சாரல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரம்
சுருளி அருவியில் துவங்கிய சாரல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் ஆரவாரம்
ADDED : செப் 28, 2025 03:36 AM
கம்பம்: சுருளி அருவியில் நேற்று காலை சாரல் விழா சாரல் மழையுடன் துவங்கியது. பல்வேறு அரசு துறைகளின் அரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தென்மாவட்டங்களில் சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், ஆன்மிக தலமாகவும் உள்ளது. இந்தாண்டு சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா வளர்ச்சி கழகம், ஊரக வளர்ச்சி துறை இணைந்து சாரல் விழா நேற்று துவங்கியது.
விழாவிற்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங், தலைமை வகித்தார். எம்.பி தங்கதமிழ்செல்வன் பேசுகையில், 'கேரளாவிலும் வனத்துறை பொதுமக்களுக்கு வசதி செய்து கொடுக்கின்றனர். இங்கு வனத்துறை கொஞ்சம் கெடுபிடிகளை தளர்த்தி பணியாற்ற வேண்டுகோள் விடுக்கின்றேன்,என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் மகாராசன், சரவணன் பங்கேற்றனர். அரசின் பல் துறைகள் ஸ்டால்கள் அமைத்து திட்டங்கள் குறித்து விளக்கினர்.
கூட்டம் குறைவு சாரல் விழாவை முன்னிட்டு சுருளி அருவியில் குளிப்பதற்கு கட்டணம் இன்று மட்டும் ரத்து செய்வதாக வனத் துறை அறிவித்தது. சாரல் விழா தொடர்பாக முறையாக விளம்பரம் செய்யாததாலும், திடீரென அறிவிப்பு செய்ததால் பொதுமக்கள் கூட்டம் சொற்ப எண்ணிக்கையில் இருந்தது. அரசு துறையினரும் ஒரு நாளைக்கு முன்பாக தகவல் கூறியதால் ஸ்டால்களை சிறப்பான அமைக்க முடியவில்லை என்றனர். சாரல் விழா கடந்த சில ஆண்டுகளாக 5 நாட்கள் நடைபெற்றது. ஆனால் இந்தாண்டு இரண்டு நாட்கள் என கலெக்டர் அறிவித்திருப்பதை சுற்றுலா ஆர்வலர்கள் குறை கூறியுள்ளனர்.