ADDED : மே 09, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, அலகு குத்தி வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முக்கிய விழாவான தேரோட்டம் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. இதற்காக எஸ்.பி., தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இரவு நேரத்தில் முல்லைப்பெரியாற்றங்கரையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இரவில் தடுப்பணையில் குளிக்க அனுமதி இல்லை.