ADDED : அக் 13, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் மந்தை வாய்க்கால் அருகே நேற்று முன்தினம் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
கூடலுார் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கம்பம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். முகம் முழுமையாக எரிந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அனைத்து ஸ்டேஷன்களிலும் காணாமல் போனவர்களின் விபரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள கேரளா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. கொலை செய்து எரிக்கப்பட்டதா, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.