/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சென்னை- - போடி ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை

ADDED : செப் 01, 2025 02:38 AM

தேனி: ''சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை தரிசனத்திற்கு சென்று வரும் வகையில் சென்னை -போடி ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும்.'' என, ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு மண்டல பூஜை தரிசனத்திற்காக நவ.16ல் கோயில் திருநடை திறக்கப்பட உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களில் அதிகமானோர் திண்டுக்கல், தேனி, குமுளி வழியாக செல்கின்றனர். பக்தர்கள் பலரும் சென்னை -போடி ரயிலில் தேனி வந்து இங்கிருந்த பஸ் மூலம் சபரிமலை சென்றனர். இதற்காக கேரள போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்தியன் ரயில்வேயில் ரயில் முன்பதிவு 60 நாட்களுக்கு முன் துவங்குகிறது. நவ.16க்கான முன்பதிவு சில நாட்களில் துவங்க உள்ளதால், இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
இயக்கினால் ஐயப்ப பக்தர்கள் பயனடைவர். எனவே,ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.