/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இருவரின் வணிக பிரச்னைகளை 'மீடியேட்டர்' மூலம் பேசி தீர்க்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சு

ADDED : பிப் 16, 2025 06:35 AM

தேனி : 'இருவரின் வணிக பிரச்னைகளை மீடியேட்டர் மூலம் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்', என தேனி சட்டக்கல்லுாரியில் நடந்த 'வணிகம் தொடர்பான பிரச்னைகளும் தீர்வுகளும்' என்ற கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.தேனி சட்டக்கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், சட்ட மாணவர்கள் வணிகம் தொடர்பான சட்டங்கள் அடிப்படை பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான சட்டங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டன. அவற்றை மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வர பரிந்துரை செய்யப்படும். வணிக பிரச்னைகளில் ஒரு உடன்படிக்கையில் இருவரின் பிரச்னைகளை முதலில் 'மீடியேட்டர்' மூலம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறை வெளிநாடுகளில் உள்ளன. இந்தியாவிலும் பழைய முறையில் அவை கடைபிடிக்கப்பட்டன. ஆனால் தற்போது பிரச்னை என்றால் உடனடியாக நீதிமன்றத்தை நாடுகின்றனர் என்றார். கல்லுாரி முதல்வர் சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். இதே தலைப்பில் வழக்கறிஞர்கள் ஆதர்ஷ் சுப்பிரமணியன், ஆதித்நாராயணன், ராம்கிஷோர் கர்ணன் பேசினர்.
மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன், பிற நீதிபதிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர். பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.