நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் உடற்கல்வித்துறை சார்பில், மதுரை காமராஜ் பல்கலை 'சி' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான ஆண்கள் பிரிவு செஸ் போட்டி நடந்தது.
போட்டியை கல்லுாரி செயலாளர் தாமோதரன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். போட்டிகளை உடற்கல்வித் துறைத்தலைவர் சிவக்குமார் ஒருங்கிணைத்தார். பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியை குருகுலஹேமா நன்றி தெரிவித்தார்.