/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாய் துணி துவைத்த போது குழந்தை ஆற்றில் மூழ்கி பலி
/
தாய் துணி துவைத்த போது குழந்தை ஆற்றில் மூழ்கி பலி
ADDED : மே 13, 2025 06:52 AM
சின்னமனூர : முல்லைப் பெரியாற்றில் தாய் துணி துவைத்துக் கொண்டிருந்த போது, கரையில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பெண் குழந்தை ஆற்றில் மூழ்கி பலியானது.
சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பொம்முராஜ் 32, இவருடைய மனைவி லலிதா.
இவர் தனது குழந்தையுடன், பக்கத்து வீட்டுப் பெண்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் சின்னமனூர் முல்லைப் பெரியாற்றில் துணி துவைக்க வந்துள்ளனர்.
தாயார் ஆற்றில் துணிகளை துவைத்து கொண்டிருந்துள்ளார். ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.
குழந்தை ஆற்றுக்குள் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை.
சிறிது நேரத்தில் துணிகளை துவைத்து முடித்த லலிதா, குழந்தையை தேடிய போது குழந்தையை காணவில்லை. பதறிய லலிதா மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து தேடிய போது, குழந்தை மயங்கிய நிலையில் மீட்டனர்.
உடனே சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சின்னமனூர் எஸ்.ஐ. இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.