/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமி திருமணம்: 7 பேர் மீது போக்சோ வழக்கு
/
சிறுமி திருமணம்: 7 பேர் மீது போக்சோ வழக்கு
ADDED : பிப் 13, 2025 05:42 AM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம், கர்ப்பம், துன்புறுத்தல் செய்த கணவர் உட்பட 7 பேர் மீது போக்சோ வழக்கு பதிவானது.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரிடம் பங்களாபட்டியைச் சேர்ந்த முருகன் 27. சிறுமியை காதலித்து திருமணம் செய்தார். சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சிறுமியை, முருகன் துன்புறுத்தியுள்ளார். 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்த முருகன். திருமணம் செய்து வைத்த
முருகன் தந்தை நாகராஜ், தாயார் ஜக்கம்மாள், உறவினர்கள் தேவி, நாகஜோதி, சின்னராணி, பெரிய பாண்டியம்மாள் ஆகிய 7 பேர் மீதும் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
--