/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை பூங்காவில் நீர் பலுானில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்
/
வைகை அணை பூங்காவில் நீர் பலுானில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்
வைகை அணை பூங்காவில் நீர் பலுானில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்
வைகை அணை பூங்காவில் நீர் பலுானில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்
ADDED : நவ 16, 2025 04:13 AM

ஆண்டிபட்டி: வைகை அணை பூங்காவில் தனியார் மூலம் அமைக்கப்பட்டுள்ள நீர் பலூனில் சுற்றுலா வரும் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை உள்ளது. கேரளா, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை பார்த்துச் செல்ல தவறுவதில்லை. வலது, இடது கரைகளில் 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. பூங்காவிற்கு வரும் குழந்தைகளை குதூகலப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு வலது, இடது கரை பூங்காக்களில் தனியார் மூலம் கொலம்பஸ் ராட்டினம், சறுக்கு, ஐஸ் கப் ராட்டினம், குதித்து விளையாட உபகரணம் ஆகியவை அமைக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்துவதற்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்கும் அம்சம் சுற்றுலா வரும் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெற்றதால் தற்போது புதிதாக பெரிய தண்ணீர் தொட்டியில் நீர் பலூன் மிதக்க விடப்பட்டுள்ளது.
நீர் பலூனில் விளையாட ஒரு குழந்தைக்கு 10 நிமிடத்திற்கு கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நீர் பலூனில் ஐந்து குழந்தைகள் வரை விளையாடும் வசதி உள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை பலூனில் விளையாட செய்து மகிழ்கின்றனர்.

