/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; தேங்காய் விலை அதிகரிப்பதால் மன மாற்றம்
/
தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; தேங்காய் விலை அதிகரிப்பதால் மன மாற்றம்
தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; தேங்காய் விலை அதிகரிப்பதால் மன மாற்றம்
தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்; தேங்காய் விலை அதிகரிப்பதால் மன மாற்றம்
ADDED : நவ 16, 2025 04:12 AM

மாவட்டத்தில் போடி, தேவாரம், வருஷநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலங்கள் உள்ளன. இதில் கத்தரி, தக்காளி, அவரை, நிலக்கடலை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியாகிறது. உரிய காலத்தில் மழை இன்றி விளைச்சல் பாதித்து சாகுபடிக்கு செய்த செலவை கூட எடுக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். பலர் மானாவாரி நிலங்களில் சாகுபடியை கைவிட்டு பிளாட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது தேங்காய் விலை அதிகரிப்பால் மானாவாரி நிலங்களில் தென்னை நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளை மானிய விலையில் வழங்குகிறது. இவற்றை வாங்கி நட்டு வருகின்றனர். வைகை அணை பண்ணையில் ஒட்டு வீரிய தென்னை, நாட்டு தென்னையும் விற்பனை செய்யப் படுகிறது.
தென்னை நன்கு பராமரித்து பணிகள் செய்தால் 45 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டலாம். நன்கு விளைந்த மரங்களில் 40 முதல் 60 காய்கள் வரை கிடைப்பதால் நிரந்தர வருமானம் கிடைக்கும். தேங்காய் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
மேலும் இளநீருக்கு கூடுதல் விலை கிடைப்பதால் குறைந்த நாட்களில் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
மற்ற பயிர்கள் பயிரிடுவதை விட தென்னையில் நஷ்டம் ஏற்படாது என கருதி விவசாயிகள் தென்னை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

