/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தைகள் எடைகுறைவு,சோர்வாக இருந்தால் அலட்சியப்படுத்த கூடாது
/
குழந்தைகள் எடைகுறைவு,சோர்வாக இருந்தால் அலட்சியப்படுத்த கூடாது
குழந்தைகள் எடைகுறைவு,சோர்வாக இருந்தால் அலட்சியப்படுத்த கூடாது
குழந்தைகள் எடைகுறைவு,சோர்வாக இருந்தால் அலட்சியப்படுத்த கூடாது
ADDED : நவ 22, 2024 05:10 AM

குழந்தைகள் உடல் எடைக்குறைவு, சோர்வாக இருந்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தால் சாதாரணமாக கருதாமல் மருத்துவபரிசோதனை செய்து சிகிச்சையளிப்பது அவசியம்,' என தேனி அரசு மருத்துவக் கல்லுாரி பொது மருத்துவத்துறை உதவி பேராசிரியை டாக்டர் எஸ்.சொப்னாஜோதி தெரிவித்துள்ளார்.
இம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் திருநாவுக்கரசு தலைமையில் இயங்குகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகளுக்கு தினமும் சிகிச்சை அளிப்பதுடன் தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்துகின்றனர். பொது மருத்துவ சிகிச்சை துறை உதவி பேராசிரியை டாக்டர் எஸ்.சொப்னாஜோதி தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:
சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது, ஏன்
நம் உடல் பான்கிரியாஸ் (pancreas) என அழைக்கக்கூடிய பல கோடி நுண்ணுயிர்களால் தகவமைத்து கொண்ட உடல் உறுப்புக்களை கொண்ட பகுதியாகும். உடலின் கணையத்தில் இன்சுலின் சுரக்கிறது.இந்த இன்சுலின் சுரப்பது சீராக இருக்க வேண்டும். போதிய இன்சுலினை சுரக்காத போது அது பற்றாக்குறை ஏற்படும். இது முதல் வகை சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.
அடுத்தது இன்சுலின் சுரந்தும் அதை சரியாக உபயோகிக்க முடியாத நிலையை (Insulin Resitence) என்கிறோம். இது 2ம் வகை சர்க்கரை நோய் பாதிப்பு ஆகும். இவ்வாறு சர்க்கரை நோய் வகைகளாக பிரித்து சிகிச்சை அளித்து வருகிறோம். முதல்வகை மரபணு முறையில் பாதிப்பு ஏற்படக்கூடியது.
இவ்வகை பாதிப்பு குழந்தை பருவம் முதல் 35 வயதிற்கு மேலும் பாதிப்பு இருக்கும். இதன் அறிகுறிகளாக அதீத தண்ணீர் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை இழப்பு, தொடர் பசி எடுத்தல் ஆகும்.
2ம் வகை பாதிப்பு உடல்பருமன், அடிக்கடி சோர்வைடைதல், துரித உணவு, இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், மது ஆகியவை அதிகளவில் சேர்த்துக் கொள்வது, சரியான நேரத்தில் உணவுஉட்கொள்ளாமல் இருப்பதும், இப்பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகரிக்குமா
இதில் தவறான புரிதல் உண்டு. இனிப்புகளை குறைவாக எடுத்து கொள்பவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இருக்காது. அதிக இனிப்புகளை எடுக்கக்கூடாது. ஆசையில் சில பேர் தினமும், பண்டிகை காலங்களிலும் அதிகளவில் இனிப்புகளை எடுத்துக் கொள்கின்றனர். இதுவும் பிரச்னையாகிவிடும். சர்க்கரையின் அளவு சீராக உள்ளவர்களுக்கு சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.
டைப் -1 சர்க்கரையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்
கிராமப்புறங்களில் பிரசவித்த தாய்மார்கள் சர்க்கரை நோய் அறிகுறி தெரியாததால் 8 மாதகுழந்தைகள் கோமா நிலைக்கு சென்ற பின் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதுபற்றி தேனி மருத்துவ கல்லுாரி பொது மருத்துவத்துறை பிரசவித்த தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக குழந்தை எடை அதிகரிக்காமல் இருப்பது. சோர்வாக இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரக பாதையில் தொற்று ஏற்படுத்துவது உள்ளிட்ட அறிகுறிகள்தென்பட்டால் உடனடியாக டாக்டர்களிடம் காண்பிக்க வேண்டும். கோமா நிலைக்கு குழந்தைகளை செல்ல விடாமல் பெற்றோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.
டைப் 2 சர்க்கரை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
ரத்தத்தில் உள்ள அதிகபடியான குளுக்கோஸ், சிறுநீரகங்கள், ரத்த நாளங்கள், தோல் போன்றவைகளை பாதிக்கிறது.மேலும் ரத்த நாளங்களை சேதப்படுத்தி மாரடைப்புக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கிறது.
இவ்வகை பாதிப்பு உடல்பருமன் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இதில் இருந்து மீள துரித உணவு, குளிர்பானங்கள், மதுவகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளக்கூடாது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இன்சுலின் ஊசிக்கும் பதிலாக, இன்சுலின் பம்ப் புதிய கண்டுபிடிப்புபயன்பாட்டிற்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் இனிவரும் காலங்களில் இதனை பயன்படுத்தி தன் உடலை பாதுகாக்க வேண்டும். உணவு பழக்க வழக்கங்களை மாற்றி, தொடர் உடற்பயிற்சியும், மருத்துவ பரிசோதனைகளை செய்து டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்தால்நீண்ட ஆரோக்கியம் பெறலாம்.
எந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்
உப்பு கலந்த உணவு, ஊறுகாய், வத்தல், அப்பளம், மிக்சர், எண்ணெய்யில் பொறித்த உணவுகள் தவிர்க்க வேண்டும்.சத்துள்ள சிறுதானியங்கள், தேவையான அளவு நீர், பழங்கள் முளைத்த சிறுதானியங்கள், பயறுவகைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.