/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு பூட்டு
/
சின்னமனுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு பூட்டு
சின்னமனுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு பூட்டு
சின்னமனுார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு பூட்டு
ADDED : செப் 20, 2025 04:34 AM

சின்னமனுார்,: சின்னமனுார் அரசு மருத்துவமனையில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
சின்னமனுார் நகராட்சியில் 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய சின்னமனூரில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. குறைவான எண்ணிக்கையில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளனர். தற்போது மகப்பேறு டாக்டர் இல்லாததால் பிரசவம் நடப்பதில்லை.
இந்நிலையில் 2022 -2023ல் எம்.எல்.ஏ தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டடம் பயன்படுத்தப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவ அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், 'அவசர சிகிச்சை பிரிவை பூட்டி வைக்கவில்லை. பாம்பு கடியால் வருபவர்கள், ஒரு நாள் அப்சர்வேசனில் வைக்க வேண்டியவர்களை இங்கு வைத்து சிகிச்சை தருகிறோம். பின் பகுதியில் காச நோய் பாதித்தவர்களையும் வைத்து சிகிச்சை தருகிறோம்.
சிகிச்சை தர நோயாளிகள் இல்லையெனும் போது, பூட்டி வைத்திருப்பார்கள். இனி பூட்டி வைக்காமல் நர்சை நியமித்து பராமரிக்க கூறுகிறேன்', என்றார்.