/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மந்த நிலையில் சின்னமனுார் வாரச்சந்தை கட்டுமான பணி
/
மந்த நிலையில் சின்னமனுார் வாரச்சந்தை கட்டுமான பணி
ADDED : மார் 30, 2025 03:28 AM
சின்னமனூர் : சின்னமனூரில் ரூ.4.5 கோடியில் நடைபெறும் வாரச்சந்தை கட்டுமான பணிகள் மந்த நிலையில் உள்ளது. கண்காணிக்க வேண்டிய பொறியாளர் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருகிறார்.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் அதிக மக்கள் கூடும் வாரச்சந்தையாக சின்னமனூர் சந்தை உள்ளது. நகராட்சி அலுவலகத்தை ஒட்டியே அமைந்துள்ளது. 18 மாதங்களுக்கு முன் ரூ.4.5 கோடியில் வாரச்சந்தை கூடுதல் கடைகள் கட்டுமானம், பராமரிப்பு பணிகள் துவங்கியது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பணிகள் ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும். ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. நகராட்சி அலுவலகம் அருகில் நடக்கும் வாரச்சந்தை பணியை பொறியாளர் கண்டு கொள்வது இல்லை. ஆணையாளஆய்வு செய்வதில்லை.
மண்டல பொறியாளர் சின்னமனூரில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து உரிய வழிகாட்டுதல் படி, தரமாக நடைபெறுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாரச்சந்தை பணியை துரிதப்படுத்த ஒப்பந்தகாரரை அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.