/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெங்களூரு வியாபாரி கொலையில் சிப்ஸ் விற்பனையாளர் கைது
/
பெங்களூரு வியாபாரி கொலையில் சிப்ஸ் விற்பனையாளர் கைது
பெங்களூரு வியாபாரி கொலையில் சிப்ஸ் விற்பனையாளர் கைது
பெங்களூரு வியாபாரி கொலையில் சிப்ஸ் விற்பனையாளர் கைது
ADDED : ஏப் 30, 2025 07:06 AM

தேனி: குறைந்த விலைக்கு தங்கநகைகள் தருவதாக கூறிய பெங்களூரு வியாபாரி திலீப்பை போலி நகைகள் கொடுத்து ஏமாற்றுபவர் எனக்கருதி தேனியில் கொலை செய்து புதைத்த வழக்கில் ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கொலையான திலீப், அவரது உறவினரையும் டூவீலரில் அழைத்து சென்றதாக சிப்ஸ் விற்பனையாளரான அவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மடுவாலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப் 40. உறவினர் கலுவாவுடன் தேனி மாவட்டத்தில் அவர் வியாபாரம் செய்து வந்தனர். ஆண்டிபட்டியில் உள்ள சிப்ஸ் கடையில் பொருட்கள் வாங்கியவர்களுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடை ஊழியர் மோகனிடம், தங்க நகைகள் தருகிறோம். அதற்கு பணம் கொடுங்கள்,'' என்றனர். கடை ஊழியர் மோகன் உடனடியாக கடை உரிமையாளர் ஜெயக்குமார், அவரது மகன் சஞ்சய்யிடம் அலைபேசியில் இந்த விபரத்தை கூறினார்.
தன்பின் தீலிப் பயன்படுத்திய அலைபேசி எண், ஏற்கனவே ஜெயக்குமார், சஞ்சய்யிடம் இரு ஆண்டுகளுக்கு முன் போலி நகைகள் கொடுத்து ஏமாற்றிய நபரின் அலைபேசி எண் போன்று இருந்ததை அறிந்தனர்.
மோகனிடம் இருவரையும் அழைத்து வரும்படி ஜெயக்குமார் கூறியுள்ளார். மோகன் அலைபேசியில் அழைக்க ஏப்.15ல் தேனி புது பஸ் ஸ்டாண்ட் வந்த திலீப் உள்ளிட்ட இருவரையும் டூவீலரில் கருவேல்நாயக்கன்பட்டி கட்சி பிரமுகர் ஒருவர் தென்னந்தோப்பிற்கு அழைத்துச் சென்றனர். பின் காரில் கடத்தி ஜல்லிப்பட்டி முருகன் தோட்டத்தில் கட்டிவைத்து தென்னை மட்டையால் தாக்கியதில் திலீப் இறந்தார்.
அந்த விவரம் கலுவாவிற்கு தெரியாத வண்ணம் அவரை மட்டும் காரில் ஏற்றி ஜல்லிபட்டி பகுதியில் இறக்கி விட்டனர்.
பின் இறந்த திலீப்பின் உடலை அருகில் உள்ள குறவன்குளம் கரையில் புதைத்து விட்டு சென்றனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக முகேஷ்பாண்டி 25, ஆகாஷ் 19, இளையராஜா 37, முருகன் 45, முத்துப்பாண்டி 19, சதிஷ்குமார் 32, சவுமியன் 31, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கொலையான திலீப்பை டூவீலரில் அழைத்து சென்ற கடை ஊழியர் தேனி பங்களாமேடு மோகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடை உரிமையாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.