ADDED : மே 05, 2025 07:14 AM

கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடந்த அன்னதானத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு, ஆயிரம் கண் பானை, உருண்டு கொடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
21 நாட்கள் நடக்கும் திருவிழா நாளை (மே 6ல்) நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நேற்று காலை அன்னதானம் நடந்தது. மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ஆர். ஜெயபாண்டியன் -- கலைவாணி குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். காலை 11:00 மணிக்கு ஆரம்பித்த அன்னதானம் பிற்பகல் 3:00 மணி வரை நடந்தது. திரளாக பொது மக்கள் பங்கேற்றனர்.

