/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
/
கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED : மே 03, 2025 06:28 AM

ஆண்டிபட்டி : ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் கொடியேற்று விழா நடந்தது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 2ல் துவங்கி 13ல் முடிகிறது. மே 11, 12 தேதிகளில் தேரோட்டம் நடைபெறும். நேற்று நடந்த கொடியேற்று விழாவில் எம்.எல்.ஏ.,மகாராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் லோகிராஜன், கோயில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் வளாகத்தில் வாஷாந்தி புண்ணியா வாஜனம் செய்தனர். கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கோயில் அர்ச்சகர் முரளி கொடி ஏற்றினார்.