/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீரில் குளோரினேசன் அளவு: கமிஷனர் ஆய்வு
/
குடிநீரில் குளோரினேசன் அளவு: கமிஷனர் ஆய்வு
ADDED : செப் 13, 2025 04:15 AM
கூடலுார்: கூடலுாரில் குடிநீரில் குளோரினேசன் அளவு சரியாக உள்ளதா என கமிஷனர் முத்துலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டப் பகுதியிலிருந்து கூடலுாருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குளோரினேசன் செய்து விநியோகிக்கப்படும் குடிநீர் சப்ளை செய்யும்போது சரியான அளவில் உள்ளதா என்பதை கமிஷனர் முத்துலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டு அப்பகுதியிலேயே உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து வீடுகளில் சேகரமாகும் குப்பை பிரித்து வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
குடிநீரை வீணாக்க கூடாது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து கொடுக்க வலியுறுத்தினார். நகராட்சி பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் விவேக் உடன் இருந்தனர்.