sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்

/

 கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்

 கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்

 கிறிஸ்தவர்கள் தவக்காலம் துவக்கம்


ADDED : பிப் 19, 2026 07:24 AM

Google News

ADDED : பிப் 19, 2026 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: கிறிஸ்தவர்களின் தவக்காலமான சாம்பல் புதன் நேற்று துவங்கியது. சர்ச்சுகளில் நடந்த திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக அனுசரிக்கின்றனர். இந்த தவக்காலம் சாம்பல் புதனன்று துவங்குகிறது.

நேற்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. நேற்று காலை சர்ச்சுகளில் நடந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று நெற்றியில் சாம்பல் பூசி தவக்காலத்தை துவங்கினர். ஈஸ்டர் பண்டிகை வரை சர்ச்களில் வெள்ளிகிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடு நடைபெறும்.

தேனி பங்களா மேடு உலகமீட்பர் சர்ச்சில் பாதிரியார் முத்து தலைமையில் திருப்பலி நடந்தது. உதவி பாதிரியார் சுவீடன் முன்னிலை வகித்தார். திருப்பலியில் பூதிப்புரம், தேனி, பழனிசெட்டிபட்டி, அன்னஞ்சி, ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். தேனி என்.ஆர்.டி., நகர் சி.எஸ்.ஐ., துாய பவுல் சர்ச்சில் நடந்த திருப்பலியிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us