/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சர்ச்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
/
சர்ச்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
சர்ச்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
சர்ச்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம் சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
ADDED : டிச 26, 2024 05:32 AM

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நேற்றுகொண்டாடப்பட்டது. குடும்பத்தினருடன் சர்ச்களுக்கு சென்ற கிறிஸ்துவர்கள் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு நற்செய்தி வழிபாட்டில் பங்கேற்று, இனிப்புகள், மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.
தேனி பங்களாமேட்டில் உள்ள ஆர்.சி., உலக மீட்பர் சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கிறிஸ்துபிறப்பிற்கான நற்செய்தி திருப்பலி வழிபாடு துவங்கியது. பங்கு பாதிரியார் முத்துதலைமையில், பாதிரியார் திருத்துவராஜ், பாதிரியார் மார்ட்டின் முன்னிலையில் கிறிஸ்து பிறப்பு நற்செய்தி அறிவிக்கப்பட்டு, சர்ச்'நுழைவாயில், அமைக்கப்பட்டு இருந்து 2 குடில்களில் இருந்த குழந்தை இயேசுக்கு சிறப்பு பிராத்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள்குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டன.அதன் பின் மணியகாரன்பட்டி வியாகுல மாதா சர்ச், ஆண்டிபட்டி புனித ஆரோக்கியமாதா சர்ச்,இந்திராநகர் சர்ச்களில் பாதிரியார் சின்னப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்னை நடந்தது.உப்புக்கோட்டை புனித சூசையப்பர் சர்ச், கோடாங்கிபட்டி திருஇருதய ஆண்டவர் சர்ச், வலையபட்டி புனிதஆரோக்கியமாதா சர்ச் உள்ளிட்ட தேவாலயங்களில் நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில்ஆர்.சி., கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தேனி என்.ஆர்.டி., நகர் பரிசுத்த பவுல் சர்ச்சில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சபைகுரு அஜித் ஸ்டேன்லிதலைமையில் கிறிஸ்துமஸ் திருவிருந்து ஆராதனையுடன் நற்செய்தி அறிவித்து பிரார்த்தனை நடந்தது. சி.எஸ்.ஐ., கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் பங்கேற்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். கேக்'வழக்கப்பட்டன. அதன்பின் சபைகுரு அஜித் ஸ்டேன்லி தலைமையில் அரப்படித்தேவன்பட்டி கிறிஸ்துவின் மகிமை சர்ச்,இந்திரா நகர் சி.எஸ்.ஐ., சர்ச்களில் கிறிஸ்மஸ் திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் அப்பகுதிகளில்உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துவர்கள் திரளாக பங்கேற்றனர்.
கம்பம்: உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பல ஊர்களில் கிறிஸ்தவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ராயப்பன்பட்டியில் புராதானமானதும், புகழ்பெற்றதுமான பனிமய மாதா சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடைபெற்றது.
உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தது. புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சர்சில் உள்ள பிரமாண்டமான வெண்கல மணி ஒலிக்கப்பட்டது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தினங்களில் மட்டுமே இந்த மணி ஒலிக்கும். இதன் சத்தம் 10 கி.மீ. சுற்றளவிற்கு கேட்கும். அதிக எடை கொண்ட இந்த மணி பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் நகரங்களிலும் உள்ள 20 க்கும் மேற்பட்ட சர்ச்சுகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
நற்கருணை ஆசிர்வாதம்
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பெரியகுளம் தென்கரை புனித அமல அன்னை சர்ச்சில் கிறிஸ்து பிறப்பு, திருப்பலி பூஜைகளை தொடர்ந்து பாதிரியார் பீட்டர் சகாயராஜ் நற்கருணை ஆசிர்வாதம் வழங்கினார். பெரியகுளம் வடகரை கோட்டை மேடு சி.எஸ்.ஐ., சர்ச்சில் திருப்பலி பூஜைகளை பாதிரியார் ஸ்டாலின் பிரபாகரன் செய்திருந்தார். இயேசுநாதர் பிறப்பு பாடல்களை பாடினர்.தாமரைக்குளம், லட்சுமிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் சர்ச்சில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது.
ஆண்டிபட்டி: பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள ஆர்.சி., சர்ச்சில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நள்ளிரவில் பாதிரியார் மார்ட்டின் தலைமையில் பாடல் திருப்பலி பூஜையும், நற்கருணை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டது.
விழாவில் இயேசுநாதர் பிறந்த குடில் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்காக திறந்து வைத்தனர் திருப்பலியில் சேவா மிஷனரி சகோதரிகள் மற்றும் பாடல் குழுவினரால் கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டு வழிபட்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

